என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருச்சி கொலை
நீங்கள் தேடியது "திருச்சி கொலை"
திருச்சி அருகே தாயை தாக்கிய தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர்:
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவர் திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், சுதர்சன், பிரியதர்சன் ஆகிய 2 மகன்களும், மதுமிதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இதில் சுதர்சன் (23) ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டும், மதுமிதா 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 2 மகன்களும் சமயபுரம் அருகில் உள்ள மாடக்குடி கிராமத்தில் தாத்தா வீட்டில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.
குணசேகரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு, வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததோடு மனைவி ரத்தினத்திடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையே மகள் மதுமிதாவிற்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு கூட பணம் இல்லாமல் ரத்தினம் சிரமப்பட்டு வந்தார். இதுபற்றி குணசேகரன் சற்றும் கவலைப்படாமல் தினமும் மது போதையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்றும் அளவுக்கு அதிகமான போதையில் அவர் வந்தார்.
அப்போது மகள் மதுமிதாவுக்கு பள்ளி கட்டணம் செலுத்தாதது குறித்து குணசேகரனுக்கும் அவரது மனைவி ரத்தினத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது குணசேகரன் ரத்தினத்தை அடித்தார்.
இது குறித்து ரத்தினம் மாடக்குடியில் தாத்தா வீட்டில் இருந்த மகன்களுக்கு போன் செய்து தெரிவித்தார். உடனே சுதர்சனும், பிரியதர்சனும் வேங்கூருக்கு புறப்பட்டு வந்தனர்.
நள்ளிரவு 1 மணிக்கு தந்தை குணசேகரனிடம் சுதர்சன் தாயை ஏன் அடித்தீர்கள் என தட்டி கேட்டார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுதர்சன், குணசேகரனை தந்தை என்றும் பாராமல் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை உறவினர்கள் காப்பாற்றி திருச்சியில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குணசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குணசேகரனின் மற்றொரு மகன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்து கொன்ற மகன் சுதர்சனை தேடி வருகிறார்கள். அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி 11ம் வகுப்பும், சரவணன் 9-ம்வகுப்பும் படித்து வந்தனர். முருகன் தனது குடும்பத்தினருடன் திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
நேற்றிரவு அவர் பணிக்கு சென்று விட்டார். பின்னர் கோமதி, சரவணன் ஒரு அறையிலும், நந்தினி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். இன்று காலை நந்தினி எழுந்து பார்த்த போது சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கோமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த நந்தினி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோமதி, சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது முருகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முருகன் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு முருகன் வேலைக்கு சென்றதும், தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

×

X